திருவல்லிக்கேணி கருடசேவை - படங்கள்
திருமங்கையாழ்வார்
மங்களாசாசனம்
விற்பெரு விழவும் கஞ்சனும் மல்லும் * வேழமும் பாகனும் வீழ*
செற்றவன் தன்னை புரமெரி செய்த* சிவனுறு துயர்களை தேவை*
பற்றலர் வீயக் கோல் கையில் கொண்டு* பார்த்தன் தன் தேர்முன் நின்றானை*
சிற்றவை பணியால் முடி துறந்தானைத்* திருவல்லிக்கேணிக் கண்டேனே*
நான்கடிகள் கொண்ட பாசுரத்தில் திருமங்கையார் எத்தனை தகவல்கள் தருகிறார், பாருங்கள் !
விற்பெரு விழவும் கஞ்சனும் மல்லும் -
வில் விளையாட்டின் போது, தன்னை அழிக்க கம்சன் நடத்திய யாகத்தையும், கம்சனையும், மலையை ஒத்த பலம் வாய்ந்த அவனது மல்யுத்த வீரர்களையும்
வேழமும் பாகனும் வீழ* செற்றவன் தன்னை -
கம்சனினின் அரண்மனையின் வாயிலில், கண்ணனை மிதித்தழிக்கக் காத்திருந்த குவலயாபீடம் என்ற பெருயானையையும் அதன் பாகனையும் வீழ்த்தி அழித்த கண்ணபிரானும்
புரமெரி செய்த* சிவனுறு துயர்களை தேவை* பற்றலர் -
திரிபுர அசுரர்களை தனது புன்னகையால் வீழ்த்திய சிவபெருமான், ஒரு சமயம், கோபத்தில் பிரம்மனின் ஐந்தாவது தலையை கிள்ளி எடுக்க, அத்தலையின் ஓடு சிவனின் உள்ளங்கையில் ஒட்டிக் கொண்டதால், (திருமகளை அவ்வோட்டில் பிட்சை அளிக்க வைத்து) சிவன் அடைந்த துயரங்களிலிருந்து விமோசனம் அளித்த (திருக்கரம்பனூர்) உத்தமனும்
வீயக் கோல் கையில் கொண்டு* பார்த்தன் தன் தேர்முன் நின்றானை -
மகாபாரத யுத்தத்தில் பாண்டவர் பக்கம் இருந்து, தன் திருக்கையில் சாட்டை ஏந்தி, அர்ஜுனனுக்கு தேரோட்டியாக களத்தில் முன் நின்று, தன் மார்பிலும் முகத்திலும் பகைவரின் அம்புகளை ஏற்று அர்ஜுனனைக் காத்த ஸ்ரீகிருஷ்ணனும்
சிற்றவை பணியால் முடி துறந்தானைத்* திருவல்லிக்கேணிக் கண்டேனே* -
சிற்றன்னை கைகேயி இட்ட கட்டளைக்குப் பணிந்து, ராஜ்ஜியத்தையும், மணிமுடியையும் விருப்பத்துடன் துறந்த ஸ்ரீராமனும் ஆன ஒப்பில்லா எம்பெருமானை திருவல்லிக்கேணியில் நான் கண்டேனே ! *********************************
இன்று காலை திருவல்லிக்கேணி கங்கனா (கங்கை கொண்டான்) மண்டபத்தில் பெருமாள் எழுந்தருளி இருந்தபோது எடுத்தவை.




இது அல்லிக்கேணி சிறுவர்கள் குழாம் எழுந்தருளப் பண்ணியிருந்த சின்ன கருடசேவை
6 மறுமொழிகள்:
Naandri. Migavum pramadham.
Can I copy & post in FB (Thirumazhisaiars Association) please?
Adiyen Ramanuja Dasan
Thirumeyyam Sundararaman
மிக்க நன்றி, வெளியூரில் இருக்கும் எங்களை போன்றவர்களை ஊருக்கே அலைத்ததுச் சென்றமைக்கு. அன்புடன்
சுந்தர்,
தாராளமாக! எனது பிளாக் லிங்கையும் தரவும். எனது மற்ற கட்டுரைகளையும் இன்னும் பலர் எனது வலைப்பதிவுக்கு வந்து வாசிக்க இது வழி வகுக்கும்.
நன்றி.
அன்புடன்
பாலா
//ராது said...
மிக்க நன்றி, வெளியூரில் இருக்கும் எங்களை போன்றவர்களை ஊருக்கே அலைத்ததுச் சென்றமைக்கு. அன்புடன்
//
ராது அவர்களே,
ஏதோ என்னாலான சிறு சேவை! யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் :-) பின்னூட்டத்திற்கு நன்றி.
Really beautiful -Venkatesh
கருடசேவை படங்களின் அருமையான பகிர்வுகளுக்குப் பாராட்டுக்கள்..
Post a Comment